பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

பப்புவா நியூ கினியா தீவில் 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 7:56 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் போர்கெரா நகரிலிருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் ரிக்டர் அளவுகோலில் சுமார் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதோடு, பல வீடுகள் இடிந்துள்ளன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment