அம்பாறை அசம்பாவிதம் தொடர்பில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் பாதுகாப்பினை வழங்குமாறும் ஆளுநர் ரோஹித போகொல்போலாகம கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இக்கால கட்டத்தில் நாட்டில் இணப்பிரச்சினை இருப்பதாக சர்வதேசத்திற்கு காட்டும் நோக்கில் திட்டமிட்டு செய்யப்பட்டு வரும் செயலாக இருக்கலாம் எனவும் தெரிவித்த ஆளுநர் மக்கள் புத்தியுடன் செயற்பட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் அம்பாறை நகரில் இடம் பெற்ற அசம்பாவிதத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறும் பாதுகாப்பினை அதிகரித்து மக்களுக்கு சுதந்திரமாக பயமின்றி நடமாடுவதற்குறிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்திகளையும் முன்னெடுத்து வரும் இக்கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தனக்கு கவலையை ஏற்படுத்துவதாகவும் அனைத்து இண மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமெனவும் மக்கள் அனைவரும் அமைதியை பேணுமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment