நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் JICA திட்ட ஆலோசகர்களுடன் இணைந்து முதலமைச்சர் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது நீர்த்தேக்கங்களின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகள் மற்றும் காட்சிப்படுத்தல்கள் JICA திட்ட ஆலோசகர்களாலும் விசேட துறைசார் நிபுணர்களாலும் இத்திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள், அரசியல் அமைப்புக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், வடக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் (வவுனியா மாவட்டம்), பிரதம செயலாளர், மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment