தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியதில் 37 பேர் படுகாயம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 27, 2018

தனியார் பஸ் விபத்துக்குள்ளாகியதில் 37 பேர் படுகாயம்!

வலப்பனை - நில்தண்டாஹின்ன, தெறிபாஹா பிரதான வீதி, அபன்எல்ல பகுதியில் தனியார் பஸ் ஒன்று இன்று காலை 9 மணியளவில் வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 37 பேர் படுகாயமடைந்து, வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் தெறிபாஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment