சீனாவையும் முந்திய இந்தியா - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

சீனாவையும் முந்திய இந்தியா

புத்தாண்டு தினத்தில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் 69,070 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும் இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன.

சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400, எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன.

உலக நாடுகளில் பிறந்த மொத்த குழந்தைகளில் அரைவாசி எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த 9 நாடுகளில் பிறந்துள்ளன. இவற்றில் பல குழந்தைகள் பிறந்த முதல் நாளிலேயே உயிரிழந்துள்ளன.

குழந்தைகளின் பிறப்பு ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குழந்தைகளின் இறப்பு விகிதமும் கவலையளிக்கிறது. 2016 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, ஒரு நாளில் 2,600 குழந்தைகள் வீதம் இறந்துள்ளன.

குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மாதத்திலேய இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 26 லட்சமாகும்.

இதில் 80 சதவீத குழந்தைகள் குறைப் பிரசவம் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளன. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் இந்த குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment