மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் தேர்தல் முறைப்பாடுகள் 7 பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான எம். உதயகுமார் தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் வகையில், மாவட்டச் செயலகத்தில் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வாழைச்சேனையில் இருந்து 2 முறைப்பாடுகளும், காத்தான்குடியில் இருந்து ஒரு முறைப்பாடும், ஏறாவூர் நகரசபைப் பகுதியில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் களுவாஞ்சிகுடிப் பகுதியில் இருந்து ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏழு முறைப்பாடுகளில் ஒன்றுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய ஆறு முறைப்பாடுகளுக்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின்போதே அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு முறைப்பாடுகள் பிரச்சாரத்தின் போதே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஒன்று அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் ஒரு முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment