இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன 50 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயற்பட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இலங்கை அணிக்காக 141 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டெஸ்ட் போட்டிகளில் தர்மசேன ஆடியுள்ளார்.
இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2009இல் முதல் முதலாக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றினார். பின்னர் 2010 இல் இருந்து டெஸ்ட் போட்டிகளிலும் தர்மசேன நடுவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற நான்காவது ஆஷஸ் போட்டி தர்மசேன நடுவராக பங்கேற்ற 50 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் நடுவராக இருந்தவர்கள் பட்டியலில் தர்மசேன 14 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளர். ஒருநாள் கிரிக்கெட்டில் 82 போட்டிகளிலும், ரி. 20 இல் 22 போட்டிகளிலும் தர்மசேன இதுவரை நடுவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment