அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 30, 2017

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த வரிச்சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட நடவடிக்கைளை எடுத்துள்ளது.

அமெரிக்கா வழங்கி வந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையின் காலஎல்லை நாளை (31) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. இது விடயம் தொடர்பான அறிவித்தலை ஊடக குறிப்பொன்றின் மூலம் அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்டிருந்தது.

இத்தகைய வரிச்சலுகை 120 உலக நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்தத்திட்டம் 1976ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. சுமார் மூவாயிரத்து 500 வகையான பொருட்களுக்கு அமெரிக்காவில் இந்த வரிச்சலுகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment