வெளிநாட்டுத் தபால் சேவைக்கான கட்டணம் உயர்வு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

வெளிநாட்டுத் தபால் சேவைக்கான கட்டணம் உயர்வு

2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்களில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்திருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டுத் தபால் சேவைக்கான கட்டணம் ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கும் அதேவேளை, வெளிநாட்டு பொதி அனுப்பும் சேவைக் கட்டணத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்றபோதிலும் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின் அவ்வாறான திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை” என்று தபால் திணைக்கள ஆணையாளர் நாயகம் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூர் தபால் கட்டணங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் உயர்த்தப்படும் என தபால் திணைக்கள வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment