சேதனப் பசளையின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 31, 2017

சேதனப் பசளையின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்தல்

திருமலை மாவட்டத்தின், கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு திண்மக் கழிவுப் பகுதிக்கு கொண்டு வரப்படும் உக்கக்ககூடிய கழிவுகளை சேதனப் பசளையாக்குவதன் மூலம், உற்பத்தித் திறனையும் அதன் உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்குடன் கிண்ணியா நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய என்.எம். நௌபீஸின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் குசைன், சுற்றாடல் உத்தியோகத்தர் றாபி, கிண்ணியா பிரதேசத்திற்குப் பொறுப்பான கிழக்கு மாகாண விவசாய போதனாசிரியர்கள், நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் பாயிஸ் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அடங்கிய குழு 30ஆம்திகதி சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டின் புதிய திட்டங்களை வகுத்து சுற்றாடல் உத்தியோகத்தரினதும், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினதும் ஆதரவுடன் பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் விதத்திலும் முன்மாதிரி செயற்திட்டங்கள் பலவற்றை உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment