மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட பாலைநகர் மீள்குடியேற்ற கிராம சென் அஃனன்ட் முன்பள்ளியின் 12வது மாணவர் வெளியேற்று நிகழ்வு இன்று 2017.12.02ஆம் திகதி இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக ஈகார்ட்ஸ் நிறுவனத்தின் நிரைவேற்று பணிப்பாளர் ஜுனைட் நளீமி கலந்து கொண்டதுடன், ஆர்பிகோ நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டனர்.
மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களைக் கொண்ட இக்கிராமத்தில் மக்கள் கல்வி ரீதியான சவால்களை எதிர்கொள்வதுடன், ஆளுமையுள்ள குழந்தைகள் இப்பிரதேசத்தில் காணப்படுவதனை நடந்தேறிய இந்நிகழ்ச்சிகள் மூலம் அவதானிக்க முடிகின்றது.
நகர்ப்புற முன்பள்ளி நிகழ்வுகளை விட குறுகிய வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டதுடன், பாரிய செலவீனங்களை பெற்றோர்கள் மீது சுமத்தாமல் எளிமையான முறையில் அழகாக நிகழ்வு வடிவமைக்கப்பட்டது பிரதேசத்தின் முன்னுதாரணமாக கொல்லப்படவேண்டிய அம்சமாகும்.
தளபாடங்கள் கற்றல் உபகரணங்கள், கழிவறை வசதிகள் என பல குறைபாடுகளை கொண்டபோதிலும் திறமை மிக்க மாணவர்களை இம்முன்பள்ளி உருவாக்கி வருவதனை அவதானிக்க முடிகின்றது.
No comments:
Post a Comment