அம்பாந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. - News View

About Us

About Us

Breaking

Friday, December 1, 2017

அம்பாந்தோட்டைத் துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை.

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று 01.12.2017ஆந்திகதி அவர் தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதோடு அஸகிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் தலைமை பிக்குகளை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்...

அம்பாந்தோட்டை துறைமுக ஊளியர்களின் தொழிற் பாதுகாப்பு தெடர்பாக நான் தனிப்பட்ட முறையில் சீன நிறுவனத்துடன் பேசியுள்ளேன். 

நான் ஒருவரை கூட தொழிலில் இருந்து நீக்க வேண்டாம் என்றேன் ஆனால் இன்று அந்த அமைச்சு எனக்குரியதல்ல. ஆனால் இன்றும் நான் எனது கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின் நான் அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இன்று அமைச்சர் தனது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவர் இன்று காலை தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டதோடு அஸ்கிரிய மற்றும் மல்வது பீட தலைவர்களின் நல்லாசிகளையும் பெற்றுக்கொண்டார். 

இந்த சந்திப்புக்களை மேற்கொண்ட பின் ஊடகவியளாளர்களை சந்தித்த அமைச்சர் மேலும் கூறியதாவது...

கட்சித் தலைவர்கள் எந்த தீர்மானங்களையும் எடுக்கலாம் ஆனால் மக்கள் கொடுத்த தேர்தல் ஆணைக்கு எதிராக இருக்கக் கூடாது. இந்த நாட்டு மக்கள் அதிகாரத்தை இந்த இரண்டு தலைவர்களுக்கும் கொடுத்தமை ஒன்றாக செல்லவே. 

ஆனால் இதை மாற்ற நினைப்பது மக்கள் கொடுத்த ஆணைக்கு ஒரு பலத்த அடி. இது பற்றி அவர்களே முடிவெடுக்க வேண்டும். நான் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அரசியல் சொல்லித்தர வேண்டியதில்லை. 

ஆனால் மக்கள் இருவரையும் விரும்பியமை ஒன்றாக நாட்டை ஆட்சிசெய்யவே. இல்லாவிட்டால் ஒரு கட்சிக்கு மட்டுமே மக்கள் அதிகாரத்தை கொடுத்திருப்பார்கள். 

ஆனால் இரண்டு கட்சிகளுக்குமே அதிகாரத்தை கொடுத்தமை சேர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யவே. இதனையே சோபித தேரரும் விரும்பினார். இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும். காரணம் இதனால் நாங்கள் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment