ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சியோல் பெருநகரின் கௌரவக் குடியுரிமை. - News View

About Us

About Us

Breaking

Thursday, November 30, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சியோல் பெருநகரின் கௌரவக் குடியுரிமை.

தென்கொரியா நாட்டிற்கு மூன்று நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு சியோல் பெருநகரின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சியோல் பெருநகர மேயர் பார்க் வொன் சூன் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 30.11.2017ஆம்திகதி முற்பகல் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி அவர்களுக்கு இந்த கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு கொழும்புக்கும் சியோலுக்குமிடையில் இரட்டை நகர ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அவர்களை சந்தித்ததை நினைவு கூர்ந்த மேயர் பார்க் வொன் சூன், நாட்டையும் கொழும்பு நகரையும் அபிவிருத்தி செய்வதற்கும் கொரிய குடியரசுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டினார். இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இந்த கௌரவ குடிடியுரிமையை வழங்க சீயோல் பெருநகர அரசாங்கம் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

குடியுரிமையை வழங்கியதன் மூலம் அழகிய சியோல் பெருநகரின் ஒருவராக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியமை தொடர்பில் சியோல் நகர மேயருக்கும் நகர மக்களுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இதனை தனக்கு மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைத்த கௌரவமாக ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமையினூடாக சியோல் பெருநகரத்தை இயக்கும் முறையை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பார்வையிட்ட ஜனாதிபதி, இந்த வெற்றிகரமான அனுபவத்தை கொழும்பு நகர திட்டமிடலில் பயன்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர்களான சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாபிடிய, தலதா அதுகோரல மற்றும் தென்கொரியாவின் இலங்கைத் தூதுவர் மனிஷா குணசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment