கட்டார் முடிவில்லாத பேச்சுவார்த்தையின் பின் மீண்டும் சந்தித்து கலந்துரையாடுவதாக ஆப்கான் - தலிபான் உறுதி - News View

Breaking

Post Top Ad

Monday, July 19, 2021

கட்டார் முடிவில்லாத பேச்சுவார்த்தையின் பின் மீண்டும் சந்தித்து கலந்துரையாடுவதாக ஆப்கான் - தலிபான் உறுதி

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தினரும், தலிபான் பிரதிநிதிகளும் சனிக்கிழமை கட்டாரில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இரு சாராரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், தோஹாவில் இடம்பெற்ற இரு‍ நாட்கள் முடிவில்லாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு தரப்பினரும் மீண்டும் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

"ஆப்கானிஸ்தான் முழுவதும் மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றுவோம்" என்று அந்த அறிக்கை மேலும் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் கட்டார் அதிகாரி முட்லக் அல்-கஹ்தானி, இரு தரப்பினரும் பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைக்கு கூட்டாக ஒப்புக் கொண்டனர், ஆனால் ஒரு போர்நிறுத்தம் இன்னும் எட்டவில்லை என்றார்.

கட்டார் தலைநகர் தோஹாவில் சனிக்கிழமை முதல் இப் பேச்சுவார்த்தைகளில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் வெளியேறி வருகின்ற நிலையில் அங்கு வன்முறை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் இராணுவ வீரர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதால், தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு இடையிலான மோதல் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளது.

திரும்பப் பெறும்போது தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதியை விரிவுபடுத்தி, வடக்கு ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் மற்றும் மூலோபாய எல்லைப் பகுதிகளின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad