தனிமைப்படுத்தல் விதி மீறி போராட்டம் : ஐவர் கைது, மேலும் ஐவரை கைது செய்ய நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 3, 2021

தனிமைப்படுத்தல் விதி மீறி போராட்டம் : ஐவர் கைது, மேலும் ஐவரை கைது செய்ய நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பொது வெளியில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜேவிபி ஊவா மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஐவரை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பதுளை, பொரலந்த பகுதியில் போராட்டம் நடத்தியமை தொடர்பில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்டு, வெலிமடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஐவரையும் தலா ரூபா ஒரு இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை என நீதிமன்றம் இதன்போது தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த ஐவரையும் கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad