ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று - News View

About Us

About Us

Breaking

Saturday, July 17, 2021

ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று

ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதரவில் நடைபெறவுள்ளது. அதன்படி இக்கூட்டமானது இன்று மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிப்பதே இதன் முக்கிய நோக்கம்.

இதன்போது நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து அரசாங்க உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டபோது, விலை அதிகரிப்பு மேற்கொண்டமைக்கு மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். விலை அதிகரிப்பை பொதுஜன பெரமுன ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனால் அவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அமைச்சர் உதய கம்மன்பில தன்னிச்சையாக செயற்பட்டு எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மேற்கொண்டிருக்கின்றார்.

அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையல்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவர தீர்மானித்து, கடந்த மாதம் 22ஆம் எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் கமன்பிலாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை மற்றும் நாளை மறுநாள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment