டெல்டா வைரசிடமிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி பாதுகாக்கும் - News View

Breaking

Post Top Ad

Monday, July 12, 2021

டெல்டா வைரசிடமிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி பாதுகாக்கும்

டெல்டா வைரசிடம் இருந்தும் ஸ்புட்னிக் வி பாதுகாக்கும் என ரஷ்ய ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதன் முதலாக காணப்பட்ட டெல்டா வைரஸ், இப்போது உலக நாடுகளில் எல்லாம் பரவி விட்டது. இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பை ஸ்புட்னிக் வி போன்ற ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் கொண்டுள்ளன என்று ரஷ்யாவின் நோவாசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வக தலைவரும், ரஷ்ய அறிவியல்கள் அகாடமியின் உறுப்பினருமான செர்ஜி நெடேசோவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வருகின்ற தரவுகள், டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பு இருப்பதை காட்டுகின்றன. ஏற்கனவே உருவாக்கிய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதால் அவற்றை பயன்படுத்தலாம்” என தெரிவித்தார்.

கமலேயா ஆராய்ச்சி மையத்தின் மக்கள் தொகை மாறுபாடு பொறிமுறைகள் ஆய்வு கூடத்தின் தலைவர் விளாடிமிர் குஷ்சின் கூறுகையில், “டெல்டா வைரசால் ஏற்படுகின்ற கொரோனாவின் கடுமையான மற்றும் அபாயகரமான நிகழ்வுகளுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீத பாதுகாப்பை ஸ்புட்னிக் வி தடுப்பூசி உறுதி செய்கிறது” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad