கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்களுக்கு சேதம் விளைவித்தோர் விரைவில் கைதாவர் : மன்னார் சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருத்து - News View

Breaking

Post Top Ad

Thursday, July 15, 2021

கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்களுக்கு சேதம் விளைவித்தோர் விரைவில் கைதாவர் : மன்னார் சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருத்து

மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களிலுள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தேவையான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் தளங்களை முகைமைத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவரான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, அம்பாறையிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீகவாபி ரஜ மகா விகாரையின் மீள்கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் பொருட் நேற்றையைதினம் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad