வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருள், பணத் தொகையுடன் வியாபாரி கைது : அடையாள அட்டைகளை பயன்படுத்தி மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருள், பணத் தொகையுடன் வியாபாரி கைது : அடையாள அட்டைகளை பயன்படுத்தி மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து 5 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் போதை வியாபாரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற 10,820 ரூபாய் பணம் ஆகியவற்றுடன் 25 வயதுடைய இளம் போதைப் பொருள் வியாபாரியொருவர் நேற்று (2021-07-16) வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் போதைப் பொருளும், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைக்கப் பெற்ற பணத் தொகையும் கைப்பற்றப்பட்டது.

அத்தோடு தமது அடையாள அட்டைகளை வழங்கி போதைப் பொருளை கடனாகப் பெற்றுக் கொண்டோரின் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகளின்படி மேலும் பலரைக் கைது செய்யும் நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரம் குறித்த வீட்டில் கடந்த வருடம் 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad