கடந்த அரசின் பலவீனங்களால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, பசில் ராஜபக்‌ஷவின் வருகை பலப்படுத்தும், பங்களாதேஷை அவமதிக்க வேண்டாமென எதிர்க்கட்சியிடம் கூறுகின்றோம் - அஜித் நிவார்ட் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

கடந்த அரசின் பலவீனங்களால்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, பசில் ராஜபக்‌ஷவின் வருகை பலப்படுத்தும், பங்களாதேஷை அவமதிக்க வேண்டாமென எதிர்க்கட்சியிடம் கூறுகின்றோம் - அஜித் நிவார்ட் கப்ரால்

கொவிட் பயணத்தடை விதிக்கப்பட்டதன் காரணமாக இக்காலாண்டில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிட்டுள்ளது. ஆனால் பசில் ராஜபக்‌ஷவின் வருகை மூலம் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என பொருளாதாரம், மூலதனச் சந்தைகள் மற்றும் அரச நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார். 

தெல்தெனிய உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், முந்தைய அரசாங்கத்தை விட நாங்கள் பொருளாதார ரீதியில் பலம் பெற்றுள்ளோம். தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாட்டில் போதுமான வெளிநாட்டு நாணயம் ஒதுக்கு இல்லை என்ற வதந்தியை எதிர்க்கட்சி பரப்புகிறது. 

கொவிட்19 தொற்று நோய் காரணமாக எங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன, குறிப்பாக சுற்றுலாத் துறையின் சரிவைக் குறிப்பிடலாம். நீண்ட காலம் செல்ல முன்பே நாங்கள் ரூபாயின் பெறுமதியை ஸ்தீரத் தன்மையில் வைக்க முயற்சிக்கிறோம்.

நாங்கள் பங்களாதேஷில் இருந்து எடுத்தது கடன் அல்ல. இது ஒரு பணப்பரிமாற்றம். எனவே பங்களாதேஷை அவமதிக்க வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சியிடம் கூற விரும்புகிறேன். 

பங்களாதேஷ் ஒரு வளரும் நாடு. அவர்களின் தனி நபர் வருமானம் நம்முடைய அளவுக்கு அதிகமாக இல்லை என்றாலும், நாட்டின் வெளிநாட்டு செலாவணி கை இருப்புக்களை அதிகரிக்க அவர்களால் முடிந்தது.

நான் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது, எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தது. நான் அதிகாரத்தில் இருந்த போது ரூ. 8 பில்லியன் கையிருப்பு இருந்தது. கடந்த ஆட்சியாளர்கள் மேலும் ரூ. 12 பில்லியன் கடனை எடுத்தே ரூ. 8 பில்லியன் கையிருப்பை ஒப்படைத்தனர். அவர்களின் பலவீனங்களால்தான் எங்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விரைவில் அதை சரிசெய்வோம்.

நாங்கள் ஒவ்வொரு சவாலையும் சமாளித்தோம். நாங்கள் நகர மாட்டோம், நாங்கள் மறைக்க மாட்டோம். கட்சிகளுக்கு இடையே மோதல்கள் உள்ளன. ஆனால் அது நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக தீர்க்கப்படும். 20 அவது திருத்தம் மற்றும் போர்ட் சிட்டி சம்பவங்களில் எமது ஆதரவு உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வதேச அளவில் எங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க எல்லா நட்பு நாடுகளினதும் உறவு சீராக உள்ளது. சர்வதேச சமூகத்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

கொவிட்19 தொற்று நோயின் கீழ் கூட, நாட்டின் வளர்ச்சி திட்டமிட்டபடி முன்னேறி வருகிறது. அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் நாங்கள் மேற்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

(எம்.ஏ.அமீனுல்லா)

No comments:

Post a Comment