ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க கலந்துரையாடல் தோல்வி - ஒன்லைன் கற்பித்தல் 9ஆவது நாளாக ஸ்தம்பிதம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 20, 2021

ஆசிரியர்கள், அதிபர்கள் தொழிற்சங்க கலந்துரையாடல் தோல்வி - ஒன்லைன் கற்பித்தல் 9ஆவது நாளாக ஸ்தம்பிதம்

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கும் இடையே இன்று (20) இடம்பெற்ற பலசுற்று கலந்துரையாடல்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, ஒன்லைன் கற்பித்தலில் இருந்து விலகியிருக்கும் தீர்மானத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், அகில இலங்கை ஆசிரியர்கள் சேவை சங்கம் உள்ளிட்ட பல ஆசிரியர் அதிபர்களின் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒன்லைன் ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கை, 9ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

கொவிட் நிலைமைக்கு மத்தியில், ஸ்தம்பிதமடைந்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் மூலம் தொடரும் செயற்றிட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஆசிரியர்கள், அதிபர்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment