இலங்கை வலைப்பந்து சம்மேளனம் உள்ளிட்ட 5 சங்கங்களின் பதிவுகள் இடை நிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் உள்ளிட்ட 5 சங்கங்களின் பதிவுகள் இடை நிறுத்தம்

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் உட்பட ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இடைநிறுத்தி, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜூடோ சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம் (Scrabble Federation), இலங்கை சர்பிங் சம்மேளனம், இலங்கை ஜூஜிட்சு சங்கம் உள்ளிட்ட ஐந்து சங்கங்களின் பதிவுகள் இவ்வாறு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எனும் வகையில் நாமல் ராஜபக்ஷவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜூலை 01ஆம் திகதியிலிருந்து குறித்த விடயம் அமுலுக்கு வருவதோடு, குறித்த விளையாட்டு சங்கங்களின் நிர்வாகம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள், பதவிகள் தொடர்பான தேர்தல்கள் ஆகியவற்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது.

அதுவரை, உரிய நிறுவனங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரியாக, ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான அமல் எதிரிசூரிய நியமிக்கப்படுவதாக, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad