CID யின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன்முறையாக பெண் நியமனம்...! - News View

About Us

About Us

Breaking

Friday, June 11, 2021

CID யின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு முதன்முறையாக பெண் நியமனம்...!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID), முதலாவது பெண் பிரதிப் பணிப்பாளராக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) இமேஷா முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார். 

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முதுமால குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

கடந்த 2007.11.03 இல் பயிலுனர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 14 வருட பொலிஸ் சேவையினை கொண்டுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் BSc பட்டத்தை பெற்றுள்ள அவர், திறந்த பல்கலைக்கழக LLB பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் ஹவாய் பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில், நெருக்கடி முகாமைத்துவ பாடநெறி, தாய்லாந்தின் பங்கொக்கில் FBI நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பண தூய்மையாக்கலை தடுக்கும் பாடநெறி, மலேசியாவின் ரோயல் பொலிஸ் அகடமியில் பிரஜா பொலிஸாக்கம் தொடர்பான பாடநெறி, இந்தியாவின் ஹைதராபாத் பொலிஸ் அகடமியில் இணைய குற்றம் (Cyber Crime) தொடர்பான பாடநெறி உள்ளிட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.

அவர், நுகேகொடை பிரிவு, குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் நற்சான்றிதழ் பிரிவு ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையிலேயே இதுவரை பிரதிப் பனிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அம்பாவல அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டு, சி.ஐ.டி.யின் புதிய பிரதிப் பணிப்பாளராக இமேஷா முத்துமால  நியமிக்கப்ப்ட்டுள்ளார்.

சி.ஐ.டி.யின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment