வாழைச்சேனை கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

வாழைச்சேனை கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிப்பு

எம்.எஸ்.எம்.நூருதீன் 

கோரளைப்பற்று - வாழைச்சேனை கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு நேற்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கோரளைப்பற்று கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மருதநகர் கிராமம் கடந்த 19.05.2021 ஆந் திகதி முதல் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தீர்மானத்திற்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று 05.06.2021 ஆந் திகதி முதல் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியினால் நேற்று 05.06.2021 சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad