முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : புதிய குழுவின் அறிக்கை பூர்த்தி - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : புதிய குழுவின் அறிக்கை பூர்த்தி

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட துறைசார் புத்­தி­ஜீ­விகள் குழு தனது அறிக்­கையை பூர்த்தி செய்­துள்­ளது.

நீதி­ய­மைச்சர் அலி­ சப்ரி வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மையில் குறிப்­பிட்ட குழு­வினை நிய­மித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இக்­கு­ழுவில் 9 பேர் அங்கம் வகிக்­கின்­றனர்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பாக அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. உட்­பட பல அமைப்­புகள் சிபாரிசு­களை அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் அவை கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் அடுத்த வாரம் குழு தனது சிபா­ரி­சுகள் அடங்­கிய அறிக்­கையை நீதி­ய­மைச்சர் அலி சப்­ரி­யிடம் கையளிக்கவுள்­ள­தா­கவும் வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

அத்­தோடு ஏற்­க­னவே 2009ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வினால் நிய­மிக்­கப்­பட்ட குழு ஏற்­க­னவே கையளித்­துள்ள அறிக்­கையும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­ட­தா­கவும் வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார்.

Vidivelli

No comments:

Post a Comment

Post Bottom Ad