இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு சிரிய வான் பாதுகாப்பு படை பதிலடி - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

இஸ்ரேலிய ஏவுகணைகளுக்கு சிரிய வான் பாதுகாப்பு படை பதிலடி

சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சிரிய அரபு செய்தி நிறுவனமான 'SANA' செவ்வாயன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

டமாஸ்கஸுக்கு தெற்கிலும் மத்திய சிரியாவிலும் உள்ள நிலையங்கள் மீதான தாக்குதல் உள்ளூர் நேரப்படி 11.36 மணிக்கு தொடங்கியது என்று ஒரு இராணுவ ஆதாரத்தை மேற்கோள் காட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பதிலுக்கு சிரிய விமான பாதுகாப்பு படைகள் வான்வழி இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பல ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் கொடுத்துள்ளது.

இதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயலுக்கு சொத்து சேதம் மாத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதல் மே 5 அன்று நிகழ்ந்தது. இதன்போது சிரியாவின் லடாகியா நகரின் தென்மேற்கே இராணுவ நிலையங்கள் குறி வைக்கப்பட்டன.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒரு தாயும் குழந்தையும் உள்ளடங்கலாக ஆறு பேர காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad