நாளை மாத்திரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

நாளை மாத்திரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வு

தற்போதைய கொரோனா வைரசு தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகளை நாளைய தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளை காலை 10 மணி முதல் மாலை நான்கு முப்பது வரை பாராளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் காலை நிதி தொடர்பான சட்டங்கள் குறித்தும் மாலை நாட்டின் கொரோனா வைரசு தொற்று நிலைமை மற்றும் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad