இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் தொடர்பிலான வழக்கு : மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் தொடர்பிலான வழக்கு : மன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

நவரசம என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரின் விவகாரம் தொடர்பிலான வழக்கில், அவருக்கு எதிராக சாட்சிகள் இருப்பின் அவற்றின் சுருக்கத்தை மன்றில் முன்னிலைப்படுத்தி, அவரை நீதிமன்றில் ஆஜர் செய்த சட்டப்பிரிவு தொடர்பில் விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று சி.ரி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது.

கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று, அஹ்னாப் ஜஸீமின் சட்டத்தரனிகள் ஊடாக நகர்த்தல் பத்திரம் ஒன்றினை முன்வைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளச் செய்யப்பட்டது. 

இதன்போதே எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்றையதினம் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள், விசாரணைக்கு வந்த போது, அஹ்னாப் ஜஸீம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம். இலியாஸ், சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜயசேகர மற்றும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருலிங்கம் ஆகியோர் மன்றில் ஆஜராகினர். பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு சார்பில் எவரும் மன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது மன்றில் சட்டத்தரனி சஞ்சய வில்சன் ஜயசேகர வாதங்களை முன்வைத்தார்.

'கடந்த 11 ஆம் திகதி வெள்ளியன்று, அஹ்னாப் ஜெஸீம், தங்காலை சி.ரி.ஐ.டி. தடுப்பு நிலையத்திலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் அத்தியாயம் பிரகாரம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு சட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ள எந்த வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad