மெல்பேர்ன் கொத்தணி இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவல் - வைத்தியர் சந்திம ஜீவந்தர - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

மெல்பேர்ன் கொத்தணி இலங்கை ஊடாக பயணித்தவர் மூலமே பரவல் - வைத்தியர் சந்திம ஜீவந்தர

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பரவி வரும் கொவிட் புதிய கொத்தணிக்கு, இலங்கையிலிருந்து அந்நாட்டிற்கு சென்றவரால் ஏற்படவில்லையென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை ஊடாக மெல்பேர்னுக்குச் சென்ற நபர் ஒருவராலேயே இக்கொத்தணி உருவாகியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டுள்ளதக சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சுகாதார பிரிவிற்கும் அறிவித்துள்ளதாக, வைத்தியசர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad