காத்தான்குடியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

காத்தான்குடியில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது

எம்.எஸ்.எம்.நூருதீன் 

காத்தான்குடியில் இன்று (09) புதன்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது காத்தான்குடியில் முதலாவது தடுப்பூசி காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பருக்கு போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதேச செயலக மற்றும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கள உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலை கட்டிடத்தில் இத்தடுப்பூசி போடும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பூனானை இராணுவ முகாம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொஸ்வத், மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெட்டியராச்சி, காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட பலரும் கலந்து கொண்டு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை பார்வையிட்டனர்.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நபீல் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எஅஸ்பர் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்றதுடன் காத்தான்குடி மேற் பார்வை பொதுச் சுகாதார ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடியில் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசியை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad