காலிக்கு சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி - சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு இடமாற்றம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

காலிக்கு சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி - சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த இருவருக்கு இடமாற்றம்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி காலிக்குச் சென்ற மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசி கொடுத்த சம்பவம் தொடர்பில் உயர் பதவியிலிருந்த இருவர் அவர்களது பதவியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காலி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் காலி பிராந்திய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் ஆகிய இருவருமே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சுகாதார அமைச்சின் அவசர சோதனைப் பிரிவு அதிகாரிகள் குழு வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad