அல்பா திரிபு கொழும்பு, மட்டக்களப்பு, திருமலை உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் - இந்திய டெல்டா திரிபுடனான இரண்டாவது நோயாளி இலங்கையில் பதிவு - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

அல்பா திரிபு கொழும்பு, மட்டக்களப்பு, திருமலை உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் - இந்திய டெல்டா திரிபுடனான இரண்டாவது நோயாளி இலங்கையில் பதிவு

இங்கிலாந்தின் கென்ட் நகரில் வேகமாகப் பரவும் அல்பா (B.1.1.7) கொவிட் திரிபு கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபாரதுவ, திஸ்ஸமஹாராம, கராப்பிட்டி, ராகமை பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மே 01ஆம் திகதியின் பின்னர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நீர்ப்பீடனம் மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 இந்திய திரிபான டெல்டா திரிபுடனான இரண்டாவது நோயாளி இலங்கையில் பதிவாகியுள்ளதாக, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடரபில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவு விடுத்துள்ள, சந்திம ஜீவந்தர, குறித்த நபர் தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய,

B.1.1.7 (alpha) பல்வேறு இடங்களில் 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

B.1.617.2 (delta): தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் அடையாளம்.

B.1.411 (one): இலங்கை திரிபு திஸ்ஸமஹாராம பிரதேச்திலிருந்து அடையாளம்.

B.1.1.7 (alpha) தடுப்பூசி பெற்ற, சுகாதார சேவை ஊழியர் ஒருவர் தற்போது பூரணமாக குணமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad