ஸ்புட்னிக் வி தடுப்பூசி விவகாரம் தொடர்பில் ஆராய விசேட வைத்திய சபை - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

ஸ்புட்னிக் வி தடுப்பூசி விவகாரம் தொடர்பில் ஆராய விசேட வைத்திய சபை

(எம்.மனோசித்ரா)

ஸ்புட்னிக் வி தடுப்பூசி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட வைத்திய சபையொன்று ஸ்தாபித்து அவர்களின் நிலைப்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்புட்னிக் தடுப்பூசி சர்ச்சை தொடர்பில் கேட்க்கப்பட்ட போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது காணப்படுகின்ற நிலைமையில் முதலாம் கட்ட தடுப்பூசியை மாத்திரமாவது வழங்க வேண்டியது அத்தியாவசியமானது என்று மருத்துவ தரப்பினர் எமக்கு அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளத் தேலையில்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

இதன் மூலம் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்வதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad