ரணிலை பிரதமராக்க மஹிந்தானந்த போன்ற சிலர் தயாராக உள்ளனரா ? - ஹேஷா விதானகே - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

ரணிலை பிரதமராக்க மஹிந்தானந்த போன்ற சிலர் தயாராக உள்ளனரா ? - ஹேஷா விதானகே

(எம்.மனோசித்ரா)

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவராவார். ஆசியாவில் சிறந்த நிபுணத்துவமும் அரசியல் அனுபவமும் உடைய மூத்த அரசியல்வாதியாவார். அதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே போன்ற சிலர் தயாராக உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கான தேவை யாருக்கு பிரதானமான தேவையாகவுள்ளது என்று மக்கள் சிந்திக்க வேண்டும். 

அரசியலில் ஆழமான அனுபவம் மிக்கவரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் சென்றால் மீண்டும் பிரதமாராகக் கூடிய வாய்ப்பும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவராவார். ஆசியாவில் சிறந்த நிபுணத்துவமும் அரசியல் அனுபவமும் உடைய மூத்த அரசியல்வாதியாவார். 

அதனடிப்படையில் அவதானிக்கும்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு மஹிந்தானந்த அழுத்கமகே போன்ற சிலர் தயாராக உள்ளனரா? என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் மீண்டும் அவருடன் இணையுமளவிற்கு தைரியமற்றவர்கள் அல்ல. அரசாங்கம் அதன் குறைபாடுகளையும் இயலாமையையும் மறைப்பதற்காக தற்போது இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து எந்தவொரு தலைவர் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களால் இலகுவாக மீளெழ முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad