அமெரிக்காவின் மூன்று வகை தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க அவசர நடவடிக்கை : இவ்வருடத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து - News View

About Us

About Us

Breaking

Saturday, June 5, 2021

அமெரிக்காவின் மூன்று வகை தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிக்க அவசர நடவடிக்கை : இவ்வருடத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதுடன், அவற்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான அவசர முயற்சியில் இந்திய மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் 'கொவிஷீல்ட்', பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவாக்சின்', ரஷ்யாவின் கமாலியா ஆய்வு நிறுவனத்தின் 'ஸ்புட்னிக்' தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. 

இவற்றில் கொவிஷீல்ட், கோவாக்சின் ஆகியவையும், கமாலியா ஆய்வு நிறுவனத்தின் உரிமத்துடன் ஸ்புட்னிக் தடுப்பூசியும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

இதேபோல அமெரிக்காவின் ஃபைசர், ஜோன்சன் அண்ட் ஜோன்சன், மொடர்னா ஆகிய மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்துகளையும் அவற்றின் உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. 

இது குறித்து மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்தை இந்தியாவில் டொக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தயாரிக்க வெளியுறவு அமைச்சகம் உதவி செய்துள்ளது. 

அமெரிக்காவின் ஃபைசர், ஜோன்சன் அண்ட் ஜோன்சன், மொடர்னா ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பாகவும் அந்நிறுவனங்களிடம் உரிமம் பெற்று இந்தியா வில் தடுப்பூசிகளை தயாரிப்பது குறித்தும் பேசி வருகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி பேசும் போது ''இந்தாண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்காக 250 கோடி 'டோஸ்' தடுப்பூசி மருந்து தயாரிப்பது தொடர்பாக பல மருந்து நிறுவனங்களுடன் பேச்சு நடக்கிறது'' என்றார்.

அமெரிக்க மருந்து நிறுவனங்கள் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தால் அவற்றின் தடுப்பூசி மருந்துக்கு அனுமதி அளிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment