வாழைச்சேனை வைத்தியசாலையின் பதிவு பிரிவு மாற்றத்தினை இடைநிறுத்த முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

வாழைச்சேனை வைத்தியசாலையின் பதிவு பிரிவு மாற்றத்தினை இடைநிறுத்த முயற்சி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார் சட்டத்தரணி ஹபீப் றிபான்

ஒட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பதிவுப் பிரிவின் கீழ் வைக்கப்பட்ட வாழைச்சேனை தள வைத்தியசாலையின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரிவுக்கு மாற்றப்பட்டது பதிவாளர் நாயகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

குறித்த தீர்விற்கு முயற்சி செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஷீர் அஹமட் மற்றும் தங்களது சொந்த மாவட்ட பிரச்சினைகளைப் போல் இதனையும் கவனத்தில் எடுத்து செயற்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ், இஷ்ஹாக் ரஹ்மான் மற்றும் தௌபீக் ஆகியோருக்கும் மற்றும் ஒற்றுமையாக செயற்பட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என சட்டத்தரணி ஹபீப் றிபான்தெரிவித்தார்.

மேலும் மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்புக்களை மேற்கொண்ட கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்விணை பெறுவதற்கு என்னால் முடியுமான சகல முன்னெடுப்புக்களையும் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad