கிழக்கு மாகாணத்திற்கு 75,000 சினோபார்ம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு..! - News View

Breaking

Post Top Ad

Sunday, June 6, 2021

கிழக்கு மாகாணத்திற்கு 75,000 சினோபார்ம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு..!

எம்.எஸ்.எம்.நூருதீன் 

கிழக்கு மாகாணத்திற்கு 75,000 சினோபார்ம் தடுப்பூசிகள் சுகாதார அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கொவிட்-19 இற்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றது.

இதற்கமைய, குறித்த மூன்று மாவட்டங்களுக்கும் தலா 25,000 சினோபாரமா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதியோர் இல்லங்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், களச் செயற்பாடுகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள், தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்கள் மற்றும் 30 - 60 வயதுக்கு இடைப்பட்ட பொதுமக்கள் ஆகிய 6 பிரிவினருக்கு இந்த தடுப்பூசி ஏற்றலின் போது முக்கியத்துவம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

கிழக்கு மாகாணத்தில் முதற் தடவையாக தடுப்பூசி ஏற்றுபவர்களுக்கே இந்த சினோபாரமா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad