பிறந்தநாள் கொண்டாட்டம்; கைதான 7 பேரில் 6 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

பிறந்தநாள் கொண்டாட்டம்; கைதான 7 பேரில் 6 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில், மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த 7 சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் குறித்த நபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில், அழகுக் கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் மொடல் அழகி பியூமி ஹங்சமாலி உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட 7 பேரில் 6 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றைய நபர் 73 வயதான பெண் எனவும் அவரை அவரது வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் அதில் கலந்து கொண்ட அனைவரும் (21) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பிலான விசாரணை, கொழும்பு குற்றவியல் திணைக்களத்திடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad