முள்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக 6 இலட்சம் ரூபா நிதி : அனைத்து மாவட்டங்களிலும் 5 சுபீட்சமான முன்பள்ளிகளை ஸ்தாபிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

முள்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக 6 இலட்சம் ரூபா நிதி : அனைத்து மாவட்டங்களிலும் 5 சுபீட்சமான முன்பள்ளிகளை ஸ்தாபிக்க தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா

(இராஜதுரை ஹஷான்)

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 7500 முள்பள்ளி பாடசாலைகளின் அபிவிருத்திகளுக்காக 6 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 5 சுபீட்சமான முன்பள்ளி பாடசாலைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி பாடசாலை தொடர்பிலான தேசிய கொள்கை கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முள்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி பாடசாலை உட்கட்டமைப்பு, கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்பள்ளி ஆசிரியர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 250 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த மேலதிக கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரித்துள்ளமை பெற்றுக் கொண்டுள்ள பாரியதொரு வெற்றியாகும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கும் தீர்மானம் 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது.

2500 ரூபா மேலதிக கொடுப்பனவை நல்லாட்சி அரசாங்கம் 250 ரூபாவாக மட்டுப்படுத்தியது. இச்செயற்பாட்டினால் முன்பள்ளி ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டார்கள். இத்தவறு தற்போது திருத்தப்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 6 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் 5 சுபீட்சமான முன்பள்ளி பாடசாலைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முன்பள்ளி பாடசாலைகளை மேம்படுத்தும் தேசிய கொள்கை செயற்றிட்டம் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்த திட்டங்கள் தேசிய கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment