பைசால் காசிமின் முயற்சியின் கீழ் நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 30 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு. ! - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

பைசால் காசிமின் முயற்சியின் கீழ் நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 30 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு. !

நூருல் ஹுதா உமர்

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்கள் சுகாதார அமைச்சரிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமையப் பெற்றுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 30 லட்சம் ரூபா பெறுமதியான 10 வகையான மருத்துவ உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வானது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி ஷகிலா இஸ்ஸதீன் தலைமையில் நேற்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad