ஓபரேஷன் சாகர் ஆரக்ஷா-2 இன்னும் முழுமையடையவில்லை : தொடரும் என்கிறது இந்தியா - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

ஓபரேஷன் சாகர் ஆரக்ஷா-2 இன்னும் முழுமையடையவில்லை : தொடரும் என்கிறது இந்தியா

லியோ நிரோஷ தர்ஷன்

ஓபரேஷன் சாகர் ஆரக்ஷா-2 இன்னும் முழுமையடையவில்லை. எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயை அணைக்கும் பணிகளில் இலங்கைக்கு எந்தளவு ஒத்துழைப்பு வழங்கியதோ அதேபோன்று பிளாஸ்டிக் மாசுக்கள் மற்றும் ஏனைய கசிவுகளை அகற்றும் பணிகளை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக இரு சிறப்பு கப்பல்கள் இலங்கை கடலில் செயற்படுவதுடன் ஒரு கப்பல் மீள அழைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு கடல்சார் ஒத்துழைப்புகளின் வலுவான நிலையை இந்த கூட்டு நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் தெளிவுப்படுத்துகையில், இலங்கை கடற்பரப்பிற்குள் தீ விபத்துக்குள்ளான பேர்ள் சரக்கு கப்பலை மீட்கும் இரு நாட்டு கூட்டு நடவடிக்கையான சாகர் ஆராக்ஷா 2 தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐ.சி.ஜி வைபவ் கப்பலில் கடல் மாசடைவதை தடுக்கும் கருவிகள் உள்ளது. அத்துடன் ஐ.சி.ஜி சமுத்ர பிரஹரி மற்றும் ஐ.சி.ஜி. வஜ்ரா ஆகிய கப்பல்களும் மாசு நீக்கம் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளன.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய கசிவுகளில் இருந்து கடலை இந்த இரு கப்பல்களும் பாதுகாக்கும் தொழில்நுட்ப பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது.

எனவே இந்த இரு கப்பல்களும் இலங்கை கடலில் மாசகற்றும் பணிகளை தொடரும் நிலையில் ஓபரேஷன் சாகர் ஆரக்ஷா-2 இன்னும் முழுமையடையவில்லை.

பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நிலையில் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய உடன் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

அண்டைய நாடென்ற வகையிலும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இவ்வாறு ஏற்படக் கூடிய அவசர தேவைகளின் போது இந்தியா எப்போதும் முன்னின்று செயற்படும்.

இதனடிப்படையில் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு ஓபரேஷன் சாகர் ஆரக்ஷா-2 என பெயரிடப்பட்டது.

பரஸ்பர மரியாதை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றின் கடல்சார் ஒத்துழைப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அழிவினைத் தடுத்தலில் இலங்கை - இந்தியா இடையில் வலுவடையும் ஒத்துழைப்பின் சிறந்த உதாரணமாகவே இந்த நடவடிக்கை வெளிப்படுகின்றது.

எவ்வாறாயினும் மாசகற்றல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க இந்திய கரையோர சிறப்பு கப்பல்கள் இரண்டு தொடர்ந்தும் இலங்கை கடலில் செயற்படும் என தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad