கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

(பாறுக் ஷிஹான்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த மூவர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார் .

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஆலையடிவேம்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையிலும் அம்பாறை வைத்தியசாலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருதமுனையைச் சேர்ந்த நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் .

எனவே வீரியமடைந்து வருகின்ற கொரோனா அனர்த்தத்திற்கு முகம் கொடுப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad