இந்திய இரசாயன தொழிற்சாலையில் தீ : 18 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

இந்திய இரசாயன தொழிற்சாலையில் தீ : 18 பேர் பலி

இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்களன்று பிற்பகல் 03.45 (10:15 GMT) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தின்போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தீப் பரவலின் பின்னர் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.

தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் தீ விபத்துக்கான உறுதியான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad