இதுவரை 17 கடலாமைகளின் உடல்கள் மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 8, 2021

இதுவரை 17 கடலாமைகளின் உடல்கள் மீட்பு

நாட்டின் கரையோரப் பகுதிகளில் உயிரிழந்த 17 கடலாமைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று (செவ்வாய்கிழமை) காலை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கற்பிட்டி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் உயிரிழந்த கடலாமைகள் கரையொதுங்கியுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கரையொதுங்கிய கடலாமைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதேவேளை, உயிரிழந்த மூன்று டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad