கல்முனை விவகாரம் - பிரதமரை நாளை சந்திக்கிறது TNA - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கல்முனை விவகாரம் - பிரதமரை நாளை சந்திக்கிறது TNA

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நாளை 4ஆம் திகதி பிரதமர் மஹிந்தராஜபக்சவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்பிலீடுபடவுள்ளனர்.

அதற்கு முன்னோடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்.பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் (30) வெள்ளிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்தபோது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜையும் சந்தித்தார்.

மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாணவர் மீட்புபேரவைத்தலைவர் செ.கணேஸ், பிரமுகர் செ.புவிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அண்மையில் அறிவிக்கப்பட்ட தரங்குறைப்பு பற்றியும் ஆராயப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(காரைதீவு குறூப் நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad