மறு அறிவித்தல் வரை தொழில் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவது இடைநிறுத்தப்பட்டது! - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

மறு அறிவித்தல் வரை தொழில் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவது இடைநிறுத்தப்பட்டது!

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, அதன் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்புறுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மறு அறிவித்தல் வரை தொழில் திணைக்களத்திற்கு பொதுமக்கள் வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், திணைக்களத்தின் பிரதான அலுவலகம், மாகாண, மாவட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம் பெறுவது தொடர்பிலான சேவையைப் பெறுவதற்கு, பின்வரும் இணைப்பின் ஊடாக நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad