போயிங் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

போயிங் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம்

பொயிங் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவுக்கு ஆறு பீ-81 நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு விமானங்களை விற்பதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் 30 வீதமான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்த விற்பனை போயிங் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் டொலர் பெறுமதி கொண்டது என்றபோதும் எத்தனை ஜெட்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் கோரப்படுகிறது என்பதை பொறுத்து இறுதி விலை குறையலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா ஏற்கனவே கடல் சார்ந்து 12 விமானங்களை இயக்கி வருகிறது. இதில் 2009 இல் பொயிங் உடன் நேரடி வர்த்தகத்தில் எட்டு விமானங்களும் 2016 இல் மேலும் நான்கு விமானங்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

No comments:

Post a Comment