கங்கை அமரனின் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை மரணம்..! - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

கங்கை அமரனின் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயாருமான மணிமேகலை மரணம்..!

இயக்குனரான வெங்கட் பிரபுவின் தாயரான மணிமேகலை நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இசை கடவுள் என போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் தன்னை ஒரு இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்துள்ளார்.

இவரது மகன்களான வெங்கட் பிரபு, நடிகர் இயக்குனர் என வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். அதேபோன்று இவரது இளையம கன் பிரேம் ஜி பாமரனும், இசையமைப்பாளர் நடிகர் என, தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில், கங்கை அமரனின் மனைவி மணிமேகலை வயது 69. உடல்நல பிரச்சனை காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11:30 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad