கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையால் மாத்தளை மாவட்டம் காலவரையரையின்றி முடக்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையால் மாத்தளை மாவட்டம் காலவரையரையின்றி முடக்கம்

கொவிட்19 வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகின்றமையால் மாத்தளை மாவட்டத்தை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மாத்தளை மாவட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

அதற்கமைய நேற்று (30) முற்பகல் 12 மணியுடன் மாத்தளை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளும் காலவரையரையின்றி முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொதுமக்கள் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கலேவெல, தம்புள்ள, நாவுல, மாத்தளை, இறத்தோட்டை, மற்றும் பல்லேப்பொல, பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள நகரங்களில் மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

எரிபொருள் நிலையங்களிலும், மருந்தகங்ளிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றிருந்ததை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தம்புள்ள நகரில் வீதியோர வர்த்தகர்கள் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இது இவ்வாறிருக்க மாத்தளை மாவட்டத்தில் 1757 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 143 பேர் இனங்காணப்பட்டுள்ளனர், இதனிடையே மாவட்டத்தில் 155 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட கொவிட் ஒழிப்புக் குழுவினர் மாத்தளை மாவட்டத்தில் இதுவரை 11 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தம்புள்ள நிருபர்

No comments:

Post a Comment