பொகவந்தலாவையில் மண் சரிவு - லயன் அறைகள் ஆபத்தில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

பொகவந்தலாவையில் மண் சரிவு - லயன் அறைகள் ஆபத்தில்

பொகவந்தலாவை, லெச்சுமி தோட்ட கீழ்ப்பிரிவில் கோவில் அருகாமையில் உள்ள குடியிருப்பின் முன்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

113 இலக்க லயன் அறைகள் உள்ள பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று (03) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிறிய கற்பாறைகள் சரிந்துள்ளதுடன் மண் திட்டும் சரிந்துள்ளதாகவும், இதனால் லயன் அறைகள் அபாய நிலையில் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த மழை பெய்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து தோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் லட்சுமி தோட்ட கீழ்ப் பிரிவு தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad